Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறியது சுத்தப் பொய்: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (12:28 IST)
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்  வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் திமுக அரசு நூறு சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக கூறி இருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசியல் நாகரீகம் என்று பேசியுள்ளார் என்றும் தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியதாக முதலமைச்சர் கூறியது முழுக்க முழுக்க பொய் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

29 மாத ஆட்சியில் மக்கள் நலனுக்காக எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க அரசு அறிவிக்கவும் இல்லை செயல்படுத்தவும் இல்லை என்று கூறிய அவர் இனியாவது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments