இந்திய சுதந்திரத்திற்காக போரட்டிய சிவங்கங்கையைச் சேர்ந்த மருது வீரர்கள் 24-10-1801 அன்று தூக்கில் போடப்பட்டு வீரமரணம் அடைந்தனர்.
அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டுகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அவரது நினைவு தினத்தை போற்றி வருகின்றனர்.
இன்று மருது சகோதரர்கள் நினைவுவிழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி'' சுதந்திரம் கிடைத்தபோது அதை கருப்பு நாளாக அறிவித்தவர்களை தமிழ் நாட்டின் கொண்டாடுகிறார்கள். பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட ராபர்ட் கால்டுவெல் தான் திராவிடம் என்று பிரித்தவர். இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் இந்தியாவுக்கு அனுப்பட்டனர். தமிழ் நாடு புண்ணிய பூமி, இங்கு ஆரியம், திராவிடம் என எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.