Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அரசு வேலையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

Advertiesment
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அரசு வேலையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

Mahendran

, புதன், 12 மார்ச் 2025 (11:22 IST)
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மீண்டும்  அரசு வேலை அளிக்க தமிழக அரசு திட்டமிட்ட நிலையில் இதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
2021 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அரசு துறைகளில், 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களில், 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என்றும், முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
 
இப்போது, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்தப்படுகின்றனர். தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர்கள், சார்பு, துணை, இணை, கூடுதல் செயலர்கள் நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
 
இந்நிலையில், சிறப்புத் திட்ட செயலாக்க துறைக்கு, மாதம் ஒரு லட்சம் ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக ஆலோசகராக பணிபுரிய, துணைச் செயலர் பதவி நிலைக்கு குறையாத பதவியில் ஓய்வுபெற்றவர்கள் விண்ணப்பிக்குமாறு விளம்பரம் வந்துள்ளது.
 
அரசு வேலைக்காக தவமிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு, இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்துள்ளது. எனவே, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக தேர்வு நடத்தி, அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் ரயில் கடத்தல்! பயங்கரவாதிகளை கொன்று பயணிகள் மீட்பு! - எல்லையில் பரபரப்பு!