Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காற்றில் பறந்த மாணவர்களின் கல்விக் கடன் ரத்து.. திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

Advertiesment
காற்றில் பறந்த மாணவர்களின் கல்விக் கடன் ரத்து.. திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!
, செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (10:24 IST)
ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் ரத்து செய்வோம் என திமுக அரசு வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது அந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  
 
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் எந்த முக்கிய வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்றும் கச்சத்தீவு பிரச்சனை, அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கேபிள் டிவி கட்டணம் குறைப்பு, வருமானவரி சலுகைகள்,  கல்வி கடன் ரத்து  ஆகிய எதையும் திமுக அரசு செய்யவில்லை என எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையை தெரிவித்துள்ளார்.  
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறிதும் நா கூச்சமின்றி 100 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் அறிக்கை விட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்  
 
கல்வி கடனை திருப்பி செலுத்த ஏதேனும் முயற்சி செய்தீர்களா? என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியை நம்பி கல்வி கடன் பெற்ற மாணவர்களின் வீடுகளில் கல்வி கடனை திருப்பி செலுத்த கோரி வங்கி அதிகாரிகளால் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளனர் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி; தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் தர சோதனை! – அமைச்சர் அதிரடி உத்தரவு!