அதிமுக – பாஜக கூட்டணியில் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கு இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரிட்டு தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.
அதேபோல், பாஜக தலைமையிலான பல கட்சிகள் இணைந்துள்ளனர். சமீபத்தில் இக்கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். சமீபத்தில், அமித்ஷாவுடன் அவர் தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
சமீபத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை குரிய கருத்து தெரிவித்த அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார், பாஜக தேசிய தலைவர் நட்டாவும், அமைச்சர் அமித் ஷாவும் கூட்டணி தர்மத்தை மீறியுள்ள அண்ணாமலையைக் கண்டிக்க வேண்டும். மாநில தலைவருக்கான தகுதியே அண்ணாமலையில் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுகு பேட்டியளித்த ஜெயக்குமார்,. பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இல்லை. அதிமுக தலைவர்களை பற்றி அண்ணாமலை பேசினால் தக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்; தனித்துப் போட்டியிட்டால் நோட்டா ஓட்டு கூட வாங்க மாட்டார் அண்ணாமலை. அவருக்கு தகுதிக்கு மீறி பதவி வழங்கப்பட்டுள்ளது.தன்னை முன்னிலைப்படுத்தி, தலைவர்களை அசிங்கப்படுத்துகிறார். பலமுறை எச்சரித்தும் அலட்சியப்படுத்துகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டணியில் பாஜக இல்லை என்பது அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்று தெரிவித்துள்ளார்.