Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை வந்தா வெள்ளம் வரத்தான் செய்யும்: அசால்ட் முதல்வர்

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (16:12 IST)
இன்று முதலே மழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி மிக கன மழைப் பெய்யும் வாய்ப்பிருப்பதாக ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 
 
ரெட் அலர்ட் என்பது மிகக் குறுகிய காலத்தில் அதீதமான கனமழைப் பெய்து அதனால் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகுவதாகும். தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 
 
இன்ற் இரவில் இருந்தே மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ரெட் ஆலர்ட்டும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மழை குறித்த முன் எச்சரிக்கை நடவடிக்கை என்னவென கேட்கப்பட்டது. 
 
இதற்கு அவர் பதில் அளித்தது பின்வருமாறு, பருவமழை முன்னெச்சரிக்கையை பொறுத்த அளவில், நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க தக்க ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. வெள்ளம் வருவது என்பது இயற்கை.

மழை அதிகமாக பெய்தால் வெள்ளம் வரும். இப்போது கூட இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியது. இயற்கை யாரிடமும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. ஆனால் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையை அரசு எதிர்கொள்ள திட்டமிட்டு செயல்படுத்தி கொண்டுள்ளது என பதில் அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் அன்பு தம்பி எடப்பாடி பழனிசாமி..! எம்ஜிஆர் பேசிய வீடியோவை வெளியிட்ட அதிமுக!

கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது? ரயில்வே நிர்வாகம் தகவல்..!

தமிழ்நாட்டுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments