Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் எதுவும் பேசவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

Mahendran
புதன், 26 மார்ச் 2025 (11:21 IST)
டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
 
கோதாவரி - காவேரி இணைப்பு திட்டம்: இதை மிக விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
மேகதாது அணை: காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சி குறித்து மீண்டும் மீண்டும் செய்திகள் வெளியாகின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி மத்திய அரசு கர்நாடக அரசை கட்டாயப்படுத்த வேண்டும். எந்த விதத்திலும் மத்திய அரசு அணைக்காக ஆதரவாக இருக்கக்கூடாது.
 
முல்லைப்பெரியாறு அணை: உச்சநீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு அணையின் பாதுகாப்பை மேம்படுத்தி, நீர்மட்டத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
 
டாஸ்மாக் ஊழல்: தமிழ்நாட்டில் நடந்த மது ஆலை முறைகேடு தொடர்பாக C.B.I. முழுமையாக விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
சட்டம், ஒழுங்கு: தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டடைந்து, போதைப்பொருள் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதை மையமாக கொண்டு, தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கியுள்ளோம்.
 
அமித்ஷாவை சந்தித்தது முழுக்க மக்களின் பிரச்சினைகளை பற்றியது. கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தேர்தல் நெருங்கும் போது அதைப்பற்றிப் பேசுவோம்" என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments