பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாக கொண்டு தேச விடுதலைக்காகவும், வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் குரல் கொடுத்தவர் முத்துராமலிங்க தேவர். இவர் 30 அக்டோபர் 1908 ஆம் ஆண்டு பிறந்தார். பின்பு 1963 ஆம் ஆண்டு அதே தேதியான 30 அக்டோபரில் உயிர் நீத்தார்.
இவரது நினைவாக இவரது பிறப்பிடமான பசும்பொன்னில் வருடந்தோரும் குருபூஜை கொண்டாடப்படுகிறது. அதன் படி, இன்று 112 ஆவது தேவர் ஜெயந்தி கொண்டாட்டப்படுகிறது. இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.