Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலுக்கு சென்ற 120 மீனவர்களின் நிலை என்ன?

Advertiesment
கடலுக்கு சென்ற 120 மீனவர்களின் நிலை என்ன?

Arun Prasath

, புதன், 30 அக்டோபர் 2019 (09:25 IST)
அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 120 மீனவர்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டத்தின் வள்ளவிலை, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். ஏற்கனவே அரபி கடலில் புயல் சின்னம் குறித்தான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் பக்கத்து மாநிலங்களில் கரை சேர்ந்துவிட்டதாக தெரிகிறது. ஆனால் தூத்தூர் பகுதியை சேர்ந்த 120 மீனவர்களின் நிலை எண்ண ஆனது என தெரியவில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரமும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மீனவர்களின் உறவினர்கள் வேண்டுகோளின் படி, தூத்தூர் பகுதி பங்கு தந்தைகள் ,மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்துள்ளனர். மேலும் மீனவர்களை கண்டுபிடித்து மீட்க கோரிக்கையும் வைத்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் கனமழை..