கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சிக் கலைந்ததற்கு ஸ்டாலினின் ராசிதான் காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இருக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் வேலூரில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ சி சண்முகத்துக்கு ஆதரவாக தரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கே.வி.குப்பம் பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது கர்நாடகாவைப் போல தமிழகத்திலும் ஆட்சிக் கவிழும் எனக் கூறியிருக்கும் ஸ்டாலினுக்குப் பதிலளிக்கும் விதமாக அவர் பேசினார் . அப்போது ‘ஸ்டாலின் தாங்கள் நினைத்திருந்தால் ஆட்சியைக் கவிழ்த்திருப்போம் என்று கூறுகிறார்கள். ஒரு காலத்திலும் அதிமுக அரசை வீழ்த்த முடியாது. ஆட்சியையும் கவிழ்க்க முடியாது. வேலூரில் திமுக சார்பாக ஒரு வாரிசு போட்டியிடுகிறார். ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை. அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு விவசாயியான நான் முதல்வராக உள்ளேன். ஆனால், திமுகவில் அதுபோல முடியுமா?. திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியை இழந்தது. ஸ்டாலினின் ராசி’ எனக் கூறினார்.