Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செத்துப்போன மொழி சமஸ்கிருதம்: அந்த கயவன் யார் என வைகோ கேள்வி!

செத்துப்போன மொழி சமஸ்கிருதம்: அந்த கயவன் யார் என வைகோ கேள்வி!
, ஞாயிறு, 28 ஜூலை 2019 (16:47 IST)
தமிழைவிட சமஸ்கிருதம் பழமையானது என தமிழக அரசின் பாட புத்தகத்தில் இருந்ததை குறிப்பிட்டு தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் தமிழக அரசின் பாடத் திட்டத்தை உருவாக்கியகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருவது தெரிந்ததே 
 
 
இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் பழமையான மொழி என தவறாக குறிப்பிட்டு உள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். சமஸ்கிருதம் என்பது செத்துப்போன மொழி என்று ஆயிரம் முறை கூறுவேன் என்று கூறிய வைகோ, தமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையானது என்று எழுதியவன் யார்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார் 
 
 
தமிழக பாடத்திட்டத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் பழமையான மொழி என்று அறிவித்தவர் யார் என்பதை கண்டுபிடித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்
 
 
இது குறித்து ஏற்கனவே கருத்து கூறிய திமுக தலைவர் மு க ஸ்டாலின், 'இந்தக் கொடுமையை எப்படி சொல்கிறது? தமிழ் 2300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால் சமஸ்கிருதமும் 4000 ஆண்டுகள் பழமையானடாம். இப்படித்தான் சொல்கிறது பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகம். காவியை கூறிக்கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும். இது தமிழக அரசா? அல்லது சமஸ்கிரத சர்க்காரா? என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 
 
 
பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் சமஸ்கிருதம் தமிழை விட தொன்மையானது எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய விருது பெற்ற இயக்குனருக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர்-எதிர்க்கட்சி தலைவர்