Publish Date: Thu, 08 Aug 2019 (13:29 IST)
Updated Date: Thu, 08 Aug 2019 (13:30 IST)
தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில் நுட்பத் துறை மணிகண்டன் நீக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முதல்வரை சந்திக்கும் எண்ணம் இல்லை என அவர் கூறியுள்ளார்.
தகவல் தொழ்ல்நுட்ப துறை அமைச்சராக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் மணிகண்டனிடம் இருந்து அந்த பொறுப்புகள் பிடுங்கப்பட்டு கூடுதல் பொறுப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை நேற்றிரவு ஆளுநர் அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு முதல்முறையாக அமைச்சரவையில் ஒரு மாற்றத்தை செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இதையடுத்து இன்று காலை மதுரையில் இருந்து அவர் சென்னைக்குப் புறப்பட்டார். அப்போது முதல்வரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு ‘இப்போதைக்கு முதல்வரை சந்திக்கப் போவதில்லை’ எனக் கூறியுள்ளார். இதற்கிடையில் மணிகண்டனின் முன்னாள் உதவியாளரும் தற்போதைய உதவியாளரும் மணிகண்டன் பதவிப் பறிப்பு சம்மந்தமாக பேசிய ஆடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.