தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள் ஆனால் தற்போது சாராய ஆறு தான் ஓடுகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது
தங்குதடையின்றி தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் கிடைக்கிறது. தற்போது 1600 பேர் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு முன்னர் இந்த நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசும் அரசும் தவறிவிட்டது, இதனால் பல உயிர்களை இழந்து உள்ளோம், விலைமதிப்பான உயிர்களை இழந்த குடும்பங்களுக்கு யார் பொறுப்பு?
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார்கள், ஆனால் தற்போது தமிழகத்தில் சாராய ஆறு தான் ஓடுகிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தால் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.