லஞ்சம் வாங்கி கைதான அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் துறை ரீதியான வழக்கு தனியாக பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் அரசு மருத்துவரை மிரட்டி 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கு காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ரத்து செய்யப்படுமா அல்லது இரண்டு வழக்குகளும் அவர் மீது தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்