Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Advertiesment
அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!
, செவ்வாய், 5 டிசம்பர் 2023 (15:28 IST)
திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார்.

இது சம்பந்தமாக நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இவ்வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியானது.

அதில், 'அரசு மருத்துவர், அவரது மனைவி மீத் வழக்குப் பதிவு செய்து அவர்களின் சேவையை களங்கப்படுத்துவதாக ED அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியதாகவும் கேட்கும் லஞ்சப் பணம் கொடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒர லஞ்சப் பணத்தில் உயரதிகாரிகளுக்கும் பங்கு தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

மேலும், அமலாக்கத்துறை அதிகாரி அங்கத் திவாரி, காவிரி ஆற்றில் மணல் குவாரி தொடர்பான பணிகளை மேற்கொண்டிருப்பதும்' விசாரணையில் தெரியவந்தது.

அமலாக்கத்துறை அதிகாரி  அங்கித் திவாரி கைதான அன்று  திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை.

இந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தனக்கு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

எனவே அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின்  ஜாமீன் மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

போலீஸார் விசாரணையில் அவரிடம் இருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சுரங்க பாதைகள்! – போக்குவரத்து நிலவரம்!