Publish Date: Fri, 02 Dec 2022 (14:35 IST)
Updated Date: Fri, 02 Dec 2022 (14:37 IST)
சென்னை ஈசிஆர் சாலை ஆறு வழிச் சாலையாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது என்பதும் சென்னை சேலம் 4 வழிச்சாலைக்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஈசிஆர் சாலையில் இருபுறமும் 11 மீட்டர் அகலத்தில் 6 வழிச் சாலையாக தரம் உயர்த்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தொடங்கி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது
புதுச்சேரி - மாமல்லபுரம் சாலை நான்கு வழித்தடமாக மேம்படுத்தப்படும் என்றும் இதற்காக ரூபாய் 1834 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் மாநில நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது
அதேபோல் புதுச்சேரி நாகப்பட்டினம் வரை நான்கு வழி தடம் மேம்படுத்தப்படும் என்றும் இதற்காக ரூ 6745 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் மாநில நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.