ஈசிஆரில் காரில் சென்ற பெண்களிடம் அத்துமீறல்: மொத்தம் 3 பேர் கைது..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:05 IST)
சென்னை ஈ சி ஆர் சாலையில் காரில் சென்ற பெண்களிடம் அத்துமீறிய சம்பவத்தில் ஏற்கனவே ஒரு கல்லூரி மாணவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து இதுவரை இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வழிமறித்து இளைஞர்கள் அத்துமீறும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
 
இந்த நிலையில் காரில் இருந்த இளைஞர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் தேடப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் நேற்று கிழக்கு தாம்பரம் பகுதியில் காரை போலீசார் கைது செய்தனர்.
 
மேலும்தனியார் கல்லூரி மாணவர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட மூன்று பேர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments