நீங்க குடிப்பீங்களா அந்த தண்ணிய..? - கெஜ்ரிவாலை சவாலுக்கு அழைக்கும் ராகுல்காந்தி!

Prasanth Karthick
வியாழன், 30 ஜனவரி 2025 (19:12 IST)

யமுனை நதியை சுத்தம் செய்து பருகுவேன் என வாக்குறுதி தந்த கெஜ்ரிவால் இப்போது அதை செய்வாரா என ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ஆம் ஆத்மி - பாஜக - காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் அரியானா பாஜக அரசு யமுனை நதியில் விஷத்தை கலப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையன் கேட்ட நிலையில் கெஜ்ரிவால் 14 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளார்.

 

இந்நிலையில் கெஜ்ரிவால் தான் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என ராகுல்காந்தி சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “கெஜ்ரிவால் ஒரு ஊழல்வாதி. மோடி சொல்வது போலவே கெஜ்ரிவாலும் தனது உரைகளில் பொய் சொல்கிறார். முந்தைய தேர்தலில் யமுனை நதியை தூய்மைப்படுத்தி அதில் குளித்து, அந்த தண்ணீரை குடிப்பேன் என கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். இப்போது நான் சவால் விடுகிறேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சவால் விட்டபடி யமுனை நதி நீரை குடிப்பாரா? அப்படி குடித்துவிட்டால் அதன் பிறகு மருத்துவமனையில் உங்களை சந்திக்கிறேன்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments