Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளி எதிரொலி; சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்!

Chennai air pollution

Prasanth Karthick

, வியாழன், 31 அக்டோபர் 2024 (08:04 IST)

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பட்டாசுகள் அதிகம் வெடிப்பதால் காற்றின் தரம் மோசமடைந்து வருவதும் தொடர்கிறது. இன்று தென் மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் நேற்று முதலாகவே பல பகுதிகளிலும் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.
 

 

இந்நிலையில் தலைநகர் சென்னையில் இன்று காலையே காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காலை 7 மணி நிலவரப்படி காற்றின் தரக்குறியீடு மணலியில் 254 ஆகவும், அரும்பாக்கத்தில் 210 ஆகவும், பெருங்குடியில் 201 ஆகவும் உள்ளது. இது காற்று தரக்குறியீட்டில் ஆரஞ்சு நிலை (Poor) அபாயமாக உள்ளது.

 

இன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் நாளை காற்றின் தரம் இன்னும் மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளிக்கு ‘அமரன்’ படம் கண்டுகளித்த முதல்வர், துணை முதல்வர்! - படக்குழுவினருக்கு வாழ்த்து!