Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை - சென்னை தேஜஸ் உள்பட 11 ரயில்கள் சேவையில் மாற்றம்: தென்னக ரயில்வே

மதுரை - சென்னை தேஜஸ் உள்பட 11 ரயில்கள் சேவையில் மாற்றம்: தென்னக ரயில்வே

Siva

, வியாழன், 31 அக்டோபர் 2024 (07:01 IST)
ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக தேஜஸ் உள்பட, 11 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
* மயிலாடுதுறை - திருச்சி, காலை 8:05 மணி ரயில், நவ., 23, 25ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
 
* திருச்சி - காரைக்கால், காலை 8:35 மணி ரயில், நாளை முதல் 30ம் தேதி வரை, திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும்
 
* திருச்சி - காரைக்கால், காலை 6:50 மணி ரயில், நாளை முதல் 30ம் தேதி வரை, திருவாரூரில் இருந்து இயக்கப்படும்
 
* திருச்சி - விழுப்புரம், மாலை 6:00 மணி ரயில், வரும் 5ம் தேதி விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்படும்
 
* காரைக்கால் - திருச்சி, மதியம் 2:55 மணி ரயில், நாளை முதல் 30ம் தேதி வரை, திருவாரூரில் இருந்து இயக்கப்படும்
 
* காரைக்கால் - தஞ்சாவூர், மதியம் 1:00 மணி ரயில், நாளை முதல் 30ம் தேதி வரை, திருவாரூரில் இருந்து இயக்கப்படும்
 
* விழுப்புரம் - திருச்சி, காலை 5:10 மணி ரயில், வரும் 6ம் தேதி விருத்தாசலத்தில் இருந்து இயக்கப்படும்
 
* விழுப்புரம் - மயிலாடுதுறை, காலை 6:00 மணி ரயில், வரும் 6ம் தேதி திருத்துறையூரில் இருந்து இயக்கப்படும்
 
* திருச்செந்துார் - எழும்பூர், இரவு 8:25 மணி ரயில், வரும் 5ம் தேதி, 2.10 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு வரும்
 
* எழும்பூர் - மதுரை, காலை 6:00 மணி தேஜஸ் விரைவு ரயில், வரும் 6ம் தேதி, 1.35 மணி நேரம் தாமதமாக புறப்படும்
 
* மதுரை - எழும்பூர், மாலை 3:00 மணி தேஜஸ் விரைவு ரயில், வரும் 6ம் தேதி ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 கோடி தரலைன்னா.. சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!