Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரட்டை இலை யாருக்கு? - விசாரணையை தள்ளி வைத்த தேர்தல் ஆணையம்

Advertiesment
இரட்டை இலை யாருக்கு? - விசாரணையை தள்ளி வைத்த தேர்தல் ஆணையம்
, வெள்ளி, 6 அக்டோபர் 2017 (18:19 IST)
இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான விசாரணையை ஒத்தி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


 

 
எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய அணிகள் ஒன்றிணைந்து, பொதுக்குழுவை நடத்தி, அதன் தீர்மானங்களை தேர்தல் கமிஷனில் சமர்பித்து, பெருவாரியான நிர்வாகிகள் தங்கள் பக்கமே இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் தங்களை கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது என தினகரன் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது.
 
இந்நிலையில் அது தொடர்பான விசாரணை இன்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி மற்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். 
 
அதன் பின்பு, அடுத்த கட்ட விசாரணை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வருகிற 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கும் இரட்டை இலை தொடர்பான விசாரணை மீண்டும் நடைபெறும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

600 ஆண்களுடன் செல்ஃபி எடுத்த இளம்பெண்