செல்போன் செயலி மூலம் மின் கட்டண கணக்கீடு: சோதனை முறையில் தொடங்க உத்தரவு!
செல்போன் செயலி மூலம் மின் கட்டண கணக்கீடு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் மின் கட்டணம் கணக்கீடு நேரடியாக மின்வாரிய ஊழியர்கள் வந்து கணக்கிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்பதும் ஊரடங்கு நேரத்தில் மற்றும் இயற்கை பேரிடர் நேரத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் செல்போன் செயலி மூலம் மின்கட்டணம் கணக்கீடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது
மேலும் மின் வாரியத்தின் பல்வேறு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மின்வாரிய உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்