Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒடிசா ரயில் விபத்தில் மின்சாரம் தாக்கி பயணிகள் உயிரிழந்தார்களா? அதிர்ச்சி தகவல்,.!

Advertiesment
Odissa Train accident
, செவ்வாய், 6 ஜூன் 2023 (13:20 IST)
சமீபத்தில் ஒரிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் 275 பேர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இன்னும் நூற்றுக்கும் மேலானவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த ரயில் விபத்தில் ஒரு சில பயணிகள் மின்சாரம் தாக்கி உயிர் இழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
ஒடிசா ரயில் விபத்தில்  உயிரிழந்தவர்களில் 40 பேரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், ரயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட 40 பேரின் உடலில் வெளிப்புற காயங்கள் தென்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளத்.
 
எனவே ரயில் விபத்தின்போது மின்சார கேபிள் அறுந்து பெட்டிகள் மேல் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின் வாரியம் முடிவா? அதிர்ச்சி தகவல்..!