Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எளிதாக நிபுணர்‌ போன்று பெயிண்ட்‌ செய்வது எப்படி? – நிப்பானின் ஐடியாக்கள்!

எளிதாக நிபுணர்‌ போன்று பெயிண்ட்‌ செய்வது எப்படி? – நிப்பானின் ஐடியாக்கள்!
, புதன், 8 டிசம்பர் 2021 (11:40 IST)
முதலில்‌ ஒரு விஷயத்தை நாம்‌ ஒத்துக்கொள்ளத்தான்‌ வேண்டும்‌, நாம்‌ நினைக்குமாறு பெயிண்ட்‌ செய்வது என்பது எப்போதும்‌ துல்லியமாக அமைவதில்லை. உங்கள்‌ சுவர்களை பெயிண்ட்‌ செய்வது என்பது ஒரு கடுமையான பணியாகும்‌.

அச்செயல்முறைகள்‌ மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும்‌, பெயிண்டிங்‌ செய்வது என்பது உண்மையாகவே மனநலனுக்கு மிகவும்‌ உகந்ததொரு பணியாகவே திகழ்கிறது. எனவே, இந்த எளிய படிநிலைகளைப்‌ பின்பற்றுங்கள்‌,பெயிண்டிங்‌ சிரமங்களைப்‌ போக்கிடுங்கள்‌, விரைவில்‌ நீங்களும்‌ ஒரு நிபுணரைப்‌ போன்று பெயிண்ட்‌ செய்வீர்கள்‌.

சுவர்களை தயார்‌ செய்தல்‌
webdunia

பெயிண்டிங்‌ செயல்முறையின்‌ போது, கருத்தில்‌ கொள்ள வேண்டிய மிக முக்கிய செயல்முறை பாதுகாப்பு ஆகும்‌. கண்ணாடிகள்‌, கையுறைகள்‌ மற்றும்‌ பாதுகாப்பு ஏப்ரான்‌ ஆகியவை பெயிண்டிங்‌ செயல்முறையைத்‌ துவங்குவதற்கு முன்பாக நீங்கள்‌ கட்டாயம்‌ அணிய வேண்டிய முதன்மை பாதுகாப்புக்‌ கலன்களாகும்‌. சுவர்கள்‌ முதலில்‌ ஒரு பெயிண்ட்‌ ஸ்கிராப்பர்‌ அல்லது மணல்‌ காகிதம்‌ கொண்டு புடைப்புகள்‌, வழக்கத்திற்கு மாறானவைகள்‌ மற்றும்‌ தூசுகள்‌ இன்றி சுத்தமாக தேய்க்கப்பட வேண்டும்‌. எந்தவொரு மூலையையும்‌ தவறவிடாமல்‌ இருத்தல்‌ மற்றும்‌ பேஸ்‌ சீராக இருத்தலை உறுதிப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகும்‌.

உங்கள்‌ பெயிண்ட்‌ வகையின்‌ மீது கவனம்‌ செலுத்துங்கள்‌

சால்வென்ட்‌-அடிப்படையிலான பெயிண்டுகள்‌ பொதுவில்‌, தண்ணீர்‌-அடிப்படையிலான பெயிண்டுகளைக்‌ காட்டிலும்‌ அதிகளவு ஆர்கானிக்‌ சால்வென்ட்களைக்‌ கொண்டிருக்கும்‌ மற்றும்‌ அவை, மனித ஆரோக்கியம்‌ மற்றும்‌ சுற்றுச்சூழலுக்கும்‌ அதிக மாசு விளைவிப்பதாகும்‌. அதே நேரத்தில்‌, தண்ணீர்‌ அடிப்படையிலான பெயிண்டுகள்‌ நச்சுத்தன்மை அற்றவை, நாற்றம்‌ இல்லாதவை மற்றும்‌ விரைவில்‌ உலரும்‌ தன்மை கொண்டவையாகும்‌. மேலும்‌, சுற்றுச்சூழலில்‌ அது உண்டாக்கும்‌ தாக்கமும்‌ புறக்கணிகத்தக்க அளவிலேயே இருக்கும்‌ என்பதால்‌, குடியிருப்புச் சந்தையில்‌ அவையே 80% வரை விற்பனையாகிறது.

சரியான சாயல்‌ (Hue) மற்றும்‌ கருத்தாக்கத்தை தேர்ந்தெடுங்கள்‌

ஆயில்‌, லேட்டெக்ஸ்‌, பிளாட்‌ அல்லது 6மட்‌ என பல்வேறு .'.பினிஷ்களில்‌ சுவர்‌ பெயிண்டுகள்‌ வழக்கமாகக்‌ கிடைக்கப்பெறும்‌. மேற்கூறியவற்றில்‌, லேட்டெக்ஸ்‌ என்பது அதிகம்‌ விரும்பப்படுவதாகும்‌. காரணம்‌ அதன்‌ சுத்திகரிப்பு செயல்முறை எளிதானது மற்றும்‌ அது அதிகம்‌ நீடித்துழைக்கும்‌

webdunia

தன்மையைக்‌ கொண்டிருப்பதே. வண்ணங்கள்‌ தேர்வினைப்‌ பொருத்தவரை, வெம்மையான நவீனத்‌ தேர்வுகள்‌ முதல்‌ துடிப்பான சாயல்கள்‌ வரை பல்வேறு தேர்வுகள்‌ கிடைக்கின்றன. உங்கள்‌ வசிப்பிடத்தில்‌ ஒரு அமைதியான மற்றும்‌ சீரான தன்மையை நீங்கள்‌ வெளிப்படுத்த விரும்பினால்‌, நடுநிலையான அல்லது வெம்மையான நீலங்கள்‌, பச்சைகள்‌, இளம்‌ பிங்குகள்‌, பீச்கள்‌ அல்லது வார்ம்‌ மஞ்சள்களை தேர்ந்தெடுக்கவும்‌.

ஒரு பிரகாசமான தோற்றத்தை நீங்கள்‌ விரும்பினால்‌, சிகப்பு, ஆரஞ்சு மற்றும்‌ தங்க நிறம்‌ போன்ற துடிப்பான சாயல்களை தேதர்ந்தெடுக்கலாம்‌. மிக முக்கியமாக, வண்ணத்தை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக அவற்றை சோதிக்க நேரம்‌ செலவழிக்க வேண்டியது மிகவும்‌ முக்கியமாகும்‌.

நீங்கள்‌ நினைப்பதைக்‌ காட்டிலும்‌, ஒரு அறையை பெயிண்ட்‌ செய்வதில்‌ அதிகம்‌ உள்ளது. ஒரு அறையை பெயிண்ட்‌ செய்வது என்பது குதூகலம்‌ அளிப்பதாக இருந்தாலும்‌, அதிக அதிக சிரமங்களையும்‌ ஏற்படுத்தலாம்‌. எனவே உங்கள்‌ சுவற்றை பெயிண்ட்‌ செய்யத்‌ துவங்குவதற்கு முன்பாக,செயல்முறைக்குத்‌ தேவையான அனைத்தும்‌ உள்ளதா என்பதை சோதித்துப்‌ பார்க்கவும்‌. செயல்முறையின்‌ ஒவ்வொரு படிநிலையிலும்‌ பங்கேற்பது, உங்கள்‌ வசிப்பிடத்தில்‌ நீடித்த வேறுபாட்டினை உண்டாக்க உங்களுக்கு வெகுவாக உதவும்‌.

எழுதியவர்‌ – மகேஷ் ஆனந்த், தலைவர்‌ - நிப்பான்‌ பெயிண்ட்‌ (இந்தியா) பிரைவேட்‌ விமிடெட்‌ (அலங்காரங்கள் பிரிவு)

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒமிக்ரான் அதிக இறப்புகளை ஏற்படுத்தாது... அமெரிக்க விஞ்ஞானி ஆறுதல் தகவல்!