மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில் போயஸ் கார்டனில் அவருக்கு சொந்தமாக இருந்த வேதா இல்லத்தை அப்போதைய அதிமுக அரசு அரசுடமையாக்குவதாக அறிவித்து சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து மறைந்த ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என கூறி, அரசுடமையாக்கிய சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று வாரங்களுக்குள் அந்த வீட்டை தீபாவிடம் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மேல்முறையீடு செய்ய கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.