Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-சிகரெட் பதுக்கி வைத்து விற்பனை.. சென்னையில் இருவர் கைது..!

Mahendran
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (10:58 IST)
சென்னையில் இ-சிகரெட்  பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசால் இ-சிகரெட்  தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில் இ-சிகரெட்  விற்பனை குறித்து போலீசார் கண்காணிப்பில் இருந்தனர்.

இந்நிலையில் ஆர்கே நகர் நெடுஞ்சாலையில் முகமது ஜப்ருல்லா என்பவர் இ-சிகரெட் விற்பனை செய்து வருவதாக தெரிய வந்தது. இதனை அடுத்து அவரும் அவருடைய கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 476 இ-சிகரெட்  பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இ-சிகரெட் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி இ-சிகரெட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments