Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலர் நியமனம்.. தமிழகத்தை சேர்ந்தவர்..!

Mahendrna
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (10:51 IST)
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா மாற்றப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா நேற்று கலைஞர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நிலையில் அதன் பின் சில நிமிடங்களில் அவர் மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி நா முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது முதல்வரின் தனி செயலாளராக பணியாற்றிய முருகானந்தம் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் ஐம்பதாவது தலைமைச் செயலாளர் முருகானந்தம் என்பதும் தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரியான இவர் 1991 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று கோவை மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறையின் இணை செயலாளர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர், நீதித்துறை செயலாளர் உள்பட பல பொறுப்புகளில் பணியாற்றிய நிலையில் தற்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளர் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Edited by Mahendrna
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments