Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்ஜ் போட்டிருந்த போது இ-பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது.. லட்சக்கணக்கில் சேதம்..!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (12:00 IST)
திருக்கோவிலூரில் இ-பைக் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
இபைக் உரிமையாளர்ஒரு அறையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சார்ஜ் போட்டதாகவும், சார்ஜ் போட்டிருந்த போது இ-பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
திடீரென கரும்புகையுடன் தீப்பற்றி இ-பைக் எரிந்ததால் பைக் உரிமையாளர் உடனடியாக குடும்பத்தினருடன் வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் இந்த தீ விபத்தில் மற்றொரு இருசக்கர வாகனம், பிரிட்ஜ் என ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
 
இதனையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு! ஒரே ஆட்சியில் மூன்றாவது தேர்தலை சந்திக்கும் தொகுதி!

பசிக்குது சீக்கிரம் முடிப்பான்னு அமைச்சர் ஒருமையில் சொல்கிறார்: வேல்முருகன் ஆதங்கம்..!

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments