Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு..!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (11:54 IST)
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்பட பண்டிகை நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது என்பதும் இதன் மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு பெரும் வசதியாக இருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
சமீபத்தில் ஆயுத பூஜை விடுமுறை தினத்திற்காக ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன என்பதும் இதன் மூலம் சென்னையில் இருந்து சென்ற ஊர் செல்வதற்கும் சொந்த ஊரிலிருந்து மீண்டும் சென்னை செல்வதற்கும் வசதியாக இருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக சென்னையில் இருந்து நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 
 
மொத்தம் 10975 சிறப்பு பேருந்துகளுக்கு இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதே போல் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்ப நவம்பர் 13, 14 ,15 வரை 9 ,467 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments