கணவரை பற்றி துர்கா ஸ்டாலின் எழுதிய நூலை பெற்றுக் கொண்ட பேரக்குழந்தைகள்

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (03:27 IST)
திமுக குடும்ப ஆட்சி நடத்துவதாக பல கட்சிகள் புகார் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று குடும்ப விழா ஒன்று சென்னையில்  நடந்துள்ளது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய நூல் ஒன்று நேற்று வெளியாக அந்த நூலை ஸ்டாலினின் பேரக்குழந்தைகள் பெற்றுக்கொண்டனர்.

ஸ்டாலினுக்கும் துர்காவுக்கும் இடையே நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்களும், ஸ்டாலினை பற்றிய அரிய தகவல்களும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படும் நூல் 'அவரும் நானும். துர்கா ஸ்டாலின் எழுதிய இந்த நூலை உயிர்மை பதிப்பகம் சார்பில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை மீனா முத்தையா வெளியிட ஸ்டாலினின் பேரக்குழந்தைகள் நிலானிசபரீசன், தன்மயா உதயநிதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த நூல் வெளியிட்டு விழாவில் நடிகை சரண்யா பொன்வண்ணன், எழுத்தாளர்கள், தமிழச்சி தங்கபாண்டியன், மீனா முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு அல்ல, அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

2 நாள் சரிவுக்கு பின் இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!

கண்டுகொள்ளாத பாஜக!.. கடுப்பில் செங்கோட்டையன்!. தவெகவில் இணைவதன் பின்னணி!...

அடுத்த கட்டுரையில்
Show comments