திமுக நிர்வாகிகள் திடீர் மாற்றம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் முக்கிய அறிவிப்பு..!

Mahendran
புதன், 28 பிப்ரவரி 2024 (11:48 IST)
சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், தனது உடல் நலக்குறைவு காரணமாக தான் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டார். எனவே, கட்சிப்பணிகள் செவ்வனே நடக்க பெரம்பலூர் வீ.ஜெகதீசன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்’’ என தெரிவித்துள்ளார்.
 
அதேபோல், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் த.இளையஅருணாவை விடுவித்து, அவருக்கு பதில் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.சேகர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இளைய அருணா, திமுகவில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் தேர்தலில் கடும் போட்டிக்கிடையில் கட்சித் தலைமையால் தேர்வு செய்யப்பட்டவர்.
 
ஆனால், தேர்தல் பாக பொறுப்பாளர்கள் கூட்டத்தை சரியாக நடத்தாதது, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்னை வடக்கு மாவட்டத்தின் கீழ் வரும் தொகுதிகளில் உள்ள எம்எல்ஏக்களை அழைக்காதது உள்ளிட்ட காரணங்களால் தலைமைக்கு புகார் சென்றதாகவும், அதன்பேரில் அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசுக்கு முட்டு கொடுப்பதன் மூலம் தனித்தன்மையை இழந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்: அரசியல் விமர்சகர்கள்

தூய்மை பணியாளர்கள் கொரானோ காலத்தில் தியாகிகள்.. இப்போது கண்டுகொள்ளப்படாதவர்களா?

ஒரு பெண்ணின் ஒரு நாள் உரிமை என்பது வெறும் ரூ.33 தானா? ரூ.1000 உரிமை தொகை குறித்து நந்தகுமார் கேள்வி..!

வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் படம்: அதிருப்தியில் புறக்கணித்த காங்கிரஸ்!

சோத்த திங்கிறியா இல்ல... இந்து அமைப்பினரிடம் கடுப்பாகி கத்திய சேகர் பாபு!...

அடுத்த கட்டுரையில்
Show comments