Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை சீட்..? இன்று இறுதி ஒப்பந்தம்.!!

Stalin Thiruma

Senthil Velan

, புதன், 28 பிப்ரவரி 2024 (10:19 IST)
மக்களவைத் தேர்தலை ஒட்டி திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, முஸ்லீம் லீக், கொமதேக ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. புதிதாக மக்கள் நீதி மய்யம் மட்டும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடந்த தேர்தல் போலவே கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரமும் ஒதுக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே சமயம் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருந்தாலும் இன்னும் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியவில்லை.
 
திருமாவளவனின் விசிக இந்த முறை நான்கு தொகுதிகளை கேட்டு திமுகவிடம் லிஸ்ட் தந்தது. சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தனி தொகுதிகளில் மூன்றையும், பெரம்பலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய பொது தொகுதிகளில் ஒன்றையும் கேட்டுள்ளது. திருச்சி வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் திரண்ட கூட்டத்தையும் சுட்டிக்காட்டி தங்கள் பலத்தையும் தெரிவித்தது. ஆனால், திமுக இதற்கு இசைவு தெரிவிக்காததால் இழுபறி நீடித்து வந்தது.
 
webdunia
இந்த நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இரண்டு தனித் தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க திமுக தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இரண்டு தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடலாம். மூன்றாவது தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட உள்ளது.  
 
இந்நிலையில் திமுக - விசிக இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.  விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் சிதம்பரத்தில்தான் போட்டியிடுவேன் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் பாஜக 2வது பெரிய கட்சியா? கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்..!