அதிமுகவின் வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் நிலை உள்ளது: ஆனந்த் ஸ்ரீனிவாசன் பேட்டி

Mahendran
புதன், 28 பிப்ரவரி 2024 (11:40 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் துறை மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்ட  ஆனந்த் ஸ்ரீனிவாசன் இன்று அந்த பொறுப்பை ஏற்றார். இந்த பொறுப்பை அவர் ஏற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அதில் அவர் கூறியதாவது: 
 
எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக அரவிந்த் சாமியின் புகைப்படத்தை பேனராக வைக்கும் நிலையில்தான் அதிமுக உள்ளது. அதிமுகவின் வாக்குகளை பாஜகவுக்கு கொடுக்கும் நிலையில் அக்கட்சி இருக்கிறது 
 
மத்தியில் ஆளும் கட்சிக்கு நெருங்கிய சாமியாரின் ஊழலை உச்ச நீதிமன்றம் நேற்று தோலுரித்துள்ளது. ஆனால், இதுபோன்ற பல விவகாரங்களை பாஜக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. 
 
மேலும்  காங்கிஸ் கட்சியில் எனக்கு பதவி கொடுத்ததாக கேள்விப்பட்டவுடன்  எனக்கே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ள கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.    திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும். கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. என அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments