Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகனுக்கு என்ன தில்லு... என்ன வார்த்த சொல்லிபுட்டாரு..!!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (13:43 IST)
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன்னரே திமுக கூட்டத்தொடரை புறக்கணித்தது குறித்து துரைமுருகன் பேட்டி. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஊரக வளர்ச்சி, கிராமப்புற வீட்டு வசதி, மருத்துவம், கல்வி என பல துறைகளுக்குமாக நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன்னரே திமுக கூட்டத்தொடரை புறக்கணித்து வெளியேறியது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளித்த போது, தமிழக நிர்வாகத்தையும் நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக்கிய ஆட்சி, இந்த அ.தி.மு.க. ஆட்சி. ஆகவே இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையை கண்டித்து வெளிநடப்புச் செய்திருக்கிறோம்.

டென்டர் விட்டு பினாமிகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதுதான் பழனிசாமிக்குத் தெரிந்த நிதி நிர்வாகம். தமிழக தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கும்போது மீண்டும் சட்டசபைக்கு திரும்புவோம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments