Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சருடன் பிரசாரத்தில் பங்கேற்ற நடிகர் சிங்கமுத்து

Advertiesment
AIADMK Minister
, திங்கள், 22 பிப்ரவரி 2021 (22:44 IST)
ஊர், ஊராக விவசாயி வேஷம் போட்டு மக்களை ஏமாற்றி வருபவர் தான் திமுக தலைவர் ஸ்டாலின் என்றும், ஊர் ஊராக சென்று மனுக்கள் வாங்கி 100 நாளில் தீர்வு காண்பதாக கூறி வரும் திமுக தலைவருக்கு ஏன் ? முதல்வர் தற்போது அறிவித்துள்ள 1100 எண்ணுக்கு தீர்வு காண முடியாத என்றும் கரூர் அருகே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணியின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இளைஞர் எழுச்சி மாநாடு கரூர் அருகே நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் ஊராட்சி ஒன்றியம், தரகம்பட்டி பகுதியில் நடைபெற்ற இந்த இளைஞர் எழுச்சி மாநாட்டில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருமான தானேஷ் என்கின்ற முத்துக்குமார் தலைமை வகித்தார்.

சிறப்புரையாற்ற நகைச்சுவை நடிகரும், தலைமைக்கழக பேச்சாளருமான நடிகர் சிங்கமுத்து, தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றினார். அப்போது, ஒரு சிலர் இளைஞர்களை அரசியலுக்கு தவறாக பயன்படுத்துகின்றனர் என்று திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜியை விமர்சித்தார். ஆனால் அதிமுக கட்சியானது இளைஞர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தினை ஏற்படுத்திட துணை முதல்வர் ஒ.பி.எஸ் மற்றும் முதல்வர் இ.பி.எஸ் ஆகியோரால் முன்னேற்றப்பாதைக்கு எடுத்து செல்லப்படுகின்றது என்றும், கருணாநிதி குடும்பத்தில் கருணாநிதி அவருக்கு பின்னர் தயாநிதி, கலாநிதி, உதயநிதி என்று பெயரிலேயே நிதி வைத்து நிதி வாங்குகின்றனர் என்றும் திமுக வின் மக்கள் கிராம சபைக்கூட்டம் என்கின்ற பெயரில் பெண்களை அவமரியாதையாகவும், வன்முறைக்கட்டிலும் ஈடுபடுவதையும் சுட்டிக்காட்டினார். மேலும், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் ஊர், ஊராக சென்று மனுக்களை வாங்கி 100 நாட்களில் தீர்வு காண்பதாக கூறி வருகின்றார். ஏற்கனவே ஆட்சியில் இருந்த போது எந்த வித தீர்வும் காணாத இவர் தற்போது தேர்தல் வருவதையொட்டி ஆங்காங்கே செல்வதாகவும், ஆனால் நமது முதல்வர் குறைகளை கேட்பதற்காக 1100 என்ற தொலைபேசி எண்ணை மக்கள் தேடி செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகளே மக்களின் குறைகளை கேட்க சொல்ல அறிமுகப்படுத்தியதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தினை ஆளும் முதல்வர் ஒருவர் விவசாயி, ஆனால், நானும் ஒரு விவசாயி என்று ஆங்காங்கே கரும்பு காட்டிற்குள் சிமெண்ட் சாலைகள் அமைத்து அதனை திமுக ஸ்டாலின் பார்க்கும் படி சினிமா சூட்டிங் எடுக்கின்றதையும் அவர் விமர்சித்தார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அதை சீர் செய்வதற்கு ஸ்டாலினால் முடியாது அவரால் எழுதி கொடுத்ததே ஒழுங்காக படிக்க முடியாது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் அடாவடி, கட்டப்பஞ்சாயத்து, செய்வார்கள் என மக்கள் மனதில் பதிந்து விட்டது என்று சொன்னால் அதற்கு உதாரணமாக பிரியாணி கடைக்கு சென்று சாப்பிட்டுவிட்டு பணம் கொடுப்பதில்லை பெண்கள் அழகு நிலையத்தில் உள்ளே சென்று பெண்களை தாறுமாறாக தாக்குகின்றனர் அதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்கிறார் இவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை உங்களுடைய அராஜகம் தலைதூக்கி உள்ளதாகவும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் குடும்பம் குடும்பமாக பிரச்சாரம் செய்தாலும் தமிழக முதல்வர் எடப்பாடி யார் அவர்கள் பிரச்சாரத்திற்கு முன்னாள் உங்களுடைய பேச்சு எடுபடாது நீங்கள் நடிக்கிற நாடகம் எடுபடாது தமிழக மக்கள் உங்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் அரசியல் புரிந்தவர்கள் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக நீங்கள் அளித்த தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை மக்கள் ஏமார்ந்து விட்டார்கள் என்று கூறினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா முன்னாள் எம்.எல்.ஏ வும், கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளருமான காமராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு பெண்கள் கபாடி போட்டி