Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக பொதுக்குழு கூட்டம் எப்போது? துரைமுருகன் அறிவிப்பு!!

திமுக பொதுக்குழு கூட்டம் எப்போது? துரைமுருகன் அறிவிப்பு!!
, வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (11:03 IST)
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாக தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 
இந்நிலையில் அதிமுக, திமுக, தேமுதிக போன்ற முக்கிய கட்சிகள் ஏற்கனவே தேர்தலுக்காக விருப்ப மனுக்களை பெற துவங்கியுள்ள நிலையில், மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
 
சென்னை கொட்டிவாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் கூட்டம் நடைபெறும் என கூறியுள்ள அவர் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறைந்த தா பாண்டியன் உடல் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது!