Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்முடி பதவி பறிப்பு.. பதறியடித்து வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்..!

Advertiesment
duraimurugan

Mahendran

, வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (12:08 IST)
அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவரது கட்சியின் பதவி பறிக்க பறிக்கப்பட்ட நிலையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவறுக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முன்னாள் முதல்வர் கருணாநிதி கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்துவிட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். 
 
கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
முதல்வர் ஸ்டாலின், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும்.  அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்முடியை அடுத்து திருச்சி சிவா பதவியும் பறிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு..!