Publish Date: Sat, 13 Nov 2021 (09:24 IST)
Updated Date: Sat, 13 Nov 2021 (09:27 IST)
சென்னையில் மூடுபனி: புறநகர் ரயில்கள் தாமதம்
சென்னையில் ஏற்பட்டுள்ள மூடுபனி காரணமாக சென்னை புறநகர் ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
சென்னையில் இன்று அதிகாலை முதல் மூடுபனி ஏற்பட்டிருப்பது ரயில்கள் போக்குவரத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் ரயில்கள் மூடுபனி காரணமாக மிகவும் மெதுவாக செல்வதாகவும் இதனால் ரயில் பயணிகள் தாமதமாக தங்களுடைய இடத்தை அடைகிறார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
அதேபோல் சாலை போக்குவரத்தில் செல்பவர்களும் தற்போது முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை புறநகரில் இருந்து அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகளும் மூடுபனியால் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது