Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. மயிலாடுதுறையில் பரபரப்பு..!

சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. மயிலாடுதுறையில் பரபரப்பு..!

Siva

, வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (07:19 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்த நிலையில் தற்போது ஒன்பது பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை  என்றும்,
மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் விடுமுறை அறிவிப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.

மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளிக்கு இன்று விடுமுறை  என்றும், அதேபோல் டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளிக்கு இன்று விடுமுறை என்றும், சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு விடுமுறை என்றும், மறையூர் தூய அந்தோனியார்  தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளிக்கு இன்று விடுப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அழகு ஜோதி நர்சரி பிரைமரி பள்ளிக்கு சிறுத்தை நடமாட்டத்தால் இன்று விடுமுறை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை பகுதியில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாசிச பாஜகவையும், அவர்களின் எடுபிடி அதிமுகவையும் வீழ்த்திடுவோம்- அமைச்சர் உதயநிதி,