Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறங்கியதுமே அமோக வரவேற்பு.. ஸ்டாலினுக்கு BMW வழங்கிய துபாய் அரசு!

Advertiesment
இறங்கியதுமே அமோக வரவேற்பு.. ஸ்டாலினுக்கு BMW வழங்கிய துபாய் அரசு!
, வெள்ளி, 25 மார்ச் 2022 (07:57 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தனது துபாய் சுற்றுப் பயணத்திற்காக துபாய்க்கு தனி விமானம் மூலம் புறப்பட்டார். 

 
தமிழக முதல்வராக பதவியேற்ற பின் மு க ஸ்டாலின் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளார். 192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சி துபாயில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு அரசு கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. இந்த அரங்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
 
தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும்பொருட்டு துபாய் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்திய துணைத்தூதர் அமன் பூரி வரவேற்றார். மேலும் ஸ்டாலின் பயணத்திற்காக துபாய் அரசு பிஎம்டபிள்யூ கார் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடந்த 24 மணி நேரத்தில் 1,694,318 பேருக்கு கொரோனா தொற்று - உலக நிலவரம்!