Publish Date: Fri, 25 Mar 2022 (07:25 IST)
Updated Date: Fri, 25 Mar 2022 (07:42 IST)
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,694,318 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47.77 கோடியை தாண்டியுள்ளது.
ஆம், உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,694,318 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 477,749,021 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,250,215 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில் இதுவரை 412,747,003 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 58,868,998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் இதுவரை உலகம் முழுவதும் 6,133,020 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.