மின்னணு சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்கள் இதுவரை இந்தியாவில் 80 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பழைய, சிப் இல்லாத சாதாரண பாஸ்போர்ட்டுகள் குறித்தும் அதிகாரிகள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி, அந்த பாஸ்போர்ட்டுகள் 2035 ஆம் ஆண்டு வரையில் அல்லது அவற்றின் காலாவதி தேதி எது முந்தையதோ அதுவரை செல்லுபடியாகும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த இ-பாஸ்போர்ட் திட்டம் கடந்த ஆண்டு சோதனை முறையில் தொடங்கப்பட்டு, 2025 மே மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதுவரையில் இந்தியாவில் 80 லட்சம் பேருக்கும், வெளிநாடுகளில் 62 ஆயிரம் பேருக்கும் இ-பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த புதிய பாஸ்போர்ட்டுகள் ஆள்மாறாட்டத்தை தடுக்கவும், தொலைந்து போனால் சிப்பில் உள்ள தகவல்களை முடக்கவும் உதவுகின்றன என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.