Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுபோதையில் போலீஸாருடன் தகராறு செய்த பெண்!

Advertiesment
chennai
, வியாழன், 5 ஜனவரி 2023 (14:41 IST)
சென்னையில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் குடிபோதையில், போலீஸாருடன் வாக்குவாதம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் இரவு நேரத்தில் போலீஸார் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ், பைக் சாகசம் செய்து, பொதுமக்களுக்கு இடையூறும், தொந்தரவும் செய்பவர்களைப் பிடித்து எச்சரிப்பதுடன், அவர்களுகு அபராதம் விதித்து வருகின்றனர்.

அந்த வகையில்,  நேற்றிரவு பெண் ஒருவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்துள்ளார், அவரது வாகனத்தைப் பறிமுதல் செய்து,  அவரிடம் அபராதம்  கட்டிவிட்டு, காலையில் வந்து வாகனத்தை எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.

அவரோ,  பைன் கட்ட முடியாது என்று கூறி  போலீஸாருடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார், இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அப்பெண்ணின் செயலுக்கு  பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டின் முன் சிறுநீர் கழித்த நபர் மீது புகார் கொடுத்ததால் துப்பாக்கிச் சூடு!