Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சானிடைசரை குடிபோதைக்காக குடித்த நபர் உயிரிழப்பு !

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (15:08 IST)
கோவையில் பாதுகாப்புக்காக ஒரு நிறுவனத்தால் வழங்கப்பட்ட சானிடைசரை, குடிபோதைக்காக நீரில் கலக்கிக் குடித்த நபர் உயிரிழந்தார்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள சானிடைசரை பயனபடுத்திக் கைகளைக் கழுவ வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நிலை தொடர்கிறது. அதனால், அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில்,கோவை மாவட்டம் சூலூரில் பெர்னார்ட் (35)என்பவர் திருப்பூரில் சிலிண்டர் விநியோகம் செய்து வருகிறார்.

இவர், மதுவுக்கு அடிமையானவர் என தெரிகிறது. இந்நிலையில், குடிக்க முடியாத நிலையில், கொரோனா தடுப்[பு நடவடிக்கையாக நிறுவனம் சார்பில் வழங்கபட்ட சனிடைசரை அவர் தண்ணீரில் கலந்துகுடித்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, அவர் ஒருநாள் முழுவதும் கண் விழிக்காமல் இருந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனெவே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த போலீஸார், ஊரடங்கு காரணமாக அங்கு உணவுக்கடைகள் இல்லாததால்,அவர்  சானிடைசரை தண்ணீரில் கலந்து குடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments