Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்டாசு வெடித்தபடி பைக் ஓட்டிய 7 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து

byke wheeling
, செவ்வாய், 14 நவம்பர் 2023 (20:21 IST)
திருச்சியில் வீலிங்க செய்து கொண்டே பட்டாசு வெடித்தபடி பைக் ஓட்டிய 7 பேரின் ஓட்டுனர் உரிமங்களை தகுதியிழப்பு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
 
திருச்சி சமயபுரத்தில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன்  உள்ளிட்ட சிலரை போலீஸார்  தேடி வருவதாக தகவல் வெளியான  நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 13  பேரை போலீஸார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அதேபோல் அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துதுறைக்கு போலீஸார் பரிந்துரை செய்திருந்தனர்.

இந்த  நிலையில்,  திருச்சியில் வீலிங்க செய்து கொண்டே பட்டாசு வெடித்தபடி பைக் ஓட்டிய 7 பேரின் ஓட்டுனர் உரிமங்களை தகுதியிழப்பு செய்ய போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உத்தரகாண்ட்டில் சுரங்க விபத்து: 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்