Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேருந்தை ஓட்டும்போதே மாரடைப்பு வந்து ஓட்டுனர் மரணம் – பயணிகளைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் !

Advertiesment
பேருந்தை ஓட்டும்போதே மாரடைப்பு வந்து ஓட்டுனர் மரணம் – பயணிகளைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் !
, ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (07:57 IST)
சென்னை வேளச்சேரியில் பேருந்து ஓட்டிக்கொண்டிருக்கும் போதே ஓட்டுனர் ராஜேஷ் கண்ணாவுக்கு மாரடைப்பு வந்ததால் அவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை கே.கே.நகர் மாநகரப் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் கண்ணா. இவருக்கு வயது 31. இவர் கோயம்பேடு –சிறுசேரி பேருந்து மார்க்கத்தில் பேருந்து ஓட்டி வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று மதியம் கோயம்பேட்டில் இருந்து சிறுசேரி செல்லும் பேருந்தை இயக்கியுள்ளார்.

பேருந்து வேளச்சேரி அருகே சென்றபோது அவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்த அவர் முயன்றுள்ளார். இதனால் சாலையின் ஓரத்தில் இருந்த சில கார்களின் மேல் அவர் மோதியுள்ளார். இதனால் கார்களில் சிறு உராய்வுகள் ஏற்பட்டன. ஆனால் எந்த உயிர்ச்சேதமும் இல்லை. பேருந்தில் மயங்கிக் கிடந்த ராஜேஷ் கண்ணாவை மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

தனக்கு மாரடைப்பு வந்தபோதும் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய டிரைவரின் மனிதநேயமிக்க செயலால் பயணிகள் நெகிழ்ந்து போயுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துன்பதுரையான இன்பதுரை… தமிழ்ப்பெயரைக் கிண்டல் செய்தாரா ஸ்டாலின் – அதிமுக கண்டனம் !