Publish Date: Sat, 18 Jul 2020 (21:42 IST)
Updated Date: Sat, 18 Jul 2020 (21:52 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுக்க ஒன்றைரைக் கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க எல்லா நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் பசுவின் கோமியத்தைக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே பசுவின் பாலில் தங்கம் உள்ளது எனக்கூறி சர்ரச்சை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.