சமீபத்தில் பெய்த மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் கழிவு நீர் மேலே வந்து சாலைகளில் நிரம்பியுள்ளது.
முக்கியமாக, கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என அனைத்து புறங்களிலும் கழிவு நீர் சூழ்ந்துள்ளது. இதனால், மலேரியா மற்றும் டைபாய்டு நோயால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, அப்பகுதியில் வசிக்கும் மக்களுள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சென்னையில் டெங்கு காயச்சல் பரவி வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி வீட்டின் அருகே தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
உடனடியாக, நகராட்சி ஊழியர்கள் இதில் தலையிட்டு, தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.