Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 சிறுவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுவன்!

15 சிறுவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுவன்!

Advertiesment
15 சிறுவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுவன்!
, வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (12:08 IST)
மும்பையில் 16 வயது சிறுவன் ஒருவனை 15 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த 15 சிறுவர்களில் 7 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.


 
 
கடந்த 2016-ஆம் ஆண்டு 16 வயது சிறுவன் ஒருவனை அவனது நண்பன் ஒருவன் வீட்டில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளான். இது குறித்து வெளியே சொன்னால் இந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியும் வைத்துள்ளான்.
 
ஆனால் பலாத்காரம் செய்த அந்த சிறுவன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளான். இதனையடுத்து அவனது நண்பர்களும் அந்த சிறுவனை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த சிறுவனை மீண்டும் 15 சிறுவர்கள் பள்ளி மைதானத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
தன்னை பலாத்காரம் செய்ய வந்ததை அந்த சிறுவன் தடுத்ததால் அவனை தாக்கியும் உள்ளனர் அவர்கள். மேலும் அதில் உள்ள ஒரு சிறுவன் அவனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். பணம் கொடுக்க மறுத்ததால் மீண்டும் அந்த சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் அவர்களில் ஒருவன்.
 
இவர்களின் இந்த தொடர் அத்துமீறல்களை தாங்கிக்கொள்ள முடியாத அந்த சிறுவன் தனது நண்பன் ஒருவனிடம் தனக்கு நடக்கும் கொடூரங்கள் குறித்து கூறியுள்ளான். இதனையடுத்து அந்த நண்பன் சமூக ஆர்வலர்களுக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்துள்ளான்.
 
சமூக ஆர்வலர்கள் சிறுவனை சந்தித்து இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க வைத்தனர். மேலும் சிறுவனிடம் நடத்தப்பட்ட பரிசோதனையிலும் அவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்ற போலீசார் அந்த சிறுவர்களில் 7 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மீதமுள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலனுடன் ஓடிய மணமகள் ; கேக் வெட்டி கொண்டாடிய மணமகன்