Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்ட நாள் இன்று: டாக்டர் ராமதாஸ் பெருமிதம்

Advertiesment
ramadoss
, புதன், 20 ஜூலை 2022 (15:49 IST)
வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்ட நாள் இன்று என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பெருமிதம் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: 
 
தமிழ்நாட்டில் பிரிந்து கிடந்த வன்னியர் அமைப்புகளை ஒன்றுபடுத்தி வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்ட நாள் இன்று. வன்னியர்களின் சமூகநீதி பயணத்தில் கடந்த  42 ஆண்டுகளில் எட்டப்பட்ட மைல்கற்களின் எண்ணிக்கை குறைவு... இன்னும் எட்டப்பட வேண்டிய எல்லைக் கற்களின் எண்ணிக்கை மிக அதிகம்!
 
சமூகநீதிப் பயணத்தில் 42 ஆண்டுகளாக என்னுடன் பயணிக்கும் அனைத்து சொந்தங்களுக்கும் 43-ஆவது ஆண்டு தொடக்க நாளில்  வாழ்த்துகள்! சமூக நீதியை வென்றெடுப்பதற்கான போரில் துப்பாக்கி குண்டுகளுக்கும், குண்டாந்தடிகளுக்கும் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
 
சமூக அநீதியாளர்களால் சதி செய்து தடுக்கப்பட்ட 10.50% இட ஒதுக்கீட்டை விரைவாக மீட்டெடுக்க வேண்டியது தான் நமது உடனடி கடமை. அதற்காக ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். அந்த முயற்சிகளில் நமக்கான வெற்றிக்கனி பறித்து விடும் தொலைவில் தான் உள்ளது!
 
வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க நாம் சாதிக்க வேண்டியவை ஏராளம்... ஏராளம். அவை அனைத்தையும் ஒன்று பட்டு வென்றெடுப்பதற்காக உழைக்க இந்த நன்னாளில் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்!
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐ.நா.சென்றாலும் இபிஎஸ்க்குதான் வெற்றி